குலோப் ஜாமுன்/Gulab Jamun recipe

குலோப் ஜாமுன் என்றாலே விரும்பாதவர்கள் எவரும் இல்லை,  தீபாவளி பொங்கல் மேலும் பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது குலாப்ஜாமுன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இனிப்பு வகை. இதனை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்
Gulab Jamun recipe in Tamil
Gulab Jamun

Type 1: Gulab Jamun

தேவையான பொருட்கள்:

குலோப் ஜாமுன் பாக்கெட் (MTR)- 1
சர்க்கரை-¾  கிலோ
ஏலக்காய்- 3
குங்குமப்பூ -  சிறிதளவு
எலுமிச்சை-  ½ பழம்
தண்ணீர் -  தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரை பாகு:

 • ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ சர்க்கரை  சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் அல்லது முக்கால்  லிட்டர் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை வேகவிடவும்
 • சர்க்கரை கரைந்து சற்று நிறம் மாறும்பொழுது  எலுமிச்சை சாறு, ஏலக்காய், சிறிதளவு குங்குமப் பூவை கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்
 • இப்போது சர்க்கரை பாகு ரெடி

குலோப் ஜாமுன் செய்முறை:

 • குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து  லேசாக பிசையவும் (மாவினை அழுத்தி பிசைய கூடாது).
 • உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் விரிசல் இல்லாமல் சிறு சிறு  உருண்டைகளாக லேசாக உருட்டிக் கொள்ளவும்.
 • ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும் அதில் நாம் பிடித்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்( என்னை அதிகமான சூட்டில் இருந்தால் குலாப்ஜாமுன் உள்ளே வேகாமல் வெளிப்புறங்களில் மட்டும் நிறம் மாறிவிடும்)
 • பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான குலோப் ஜாமூன் ரெடி.

Type 2: Gulab Jamun

தேவையான பொருட்கள்

பால் பவுடர்  - 1 கப்
மைதா -  3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
ஏலக்காய்- 3
குங்குமப்பூ -  சிறிதளவு
எலுமிச்சை-  ½ பழம்

சர்க்கரை பாகு:

 • ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ சர்க்கரை  சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் அல்லது முக்கால்  லிட்டர் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் வரை வேகவிடவும்
 • சர்க்கரை கரைந்து சற்று நிறம் மாறும்பொழுது  எலுமிச்சை சாறு, ஏலக்காய், சிறிதளவு குங்குமப் பூவை கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்
 • இப்போது சர்க்கரை பாகு ரெடிகுலோப் ஜாமுன் செய்முறை:

 • பால் பவுடர், மைதா, ஒரு சிட்டிகை சோடா உப்பு  இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து  லேசாக பிசையவும் (மாவினை அழுத்தி பிசைய கூடாது).
 • உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் விரிசல் இல்லாமல் சிறு சிறு  உருண்டைகளாக லேசாக உருட்டிக் கொள்ளவும்.
 • ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும் அதில் நாம் பிடித்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்( என்னை அதிகமான சூட்டில் இருந்தால் குலாப்ஜாமுன் உள்ளே வேகாமல் வெளிப்புறங்களில் மட்டும் நிறம் மாறிவிடும்)
 • பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான குலோப் ஜாமூன் ரெடி.இதேபோல் பிரட், ரவை, பால்கோவா போன்றவைகளிலும் குலோப்ஜாமுன் செய்யலாம்